states

img

தொடர் வீழ்ச்சியால் அவநம்பிக்கையும், கலக்கமும்! வங்கத்தில் பாஜக கதி இதுதான்!

மேற்குவங்கத்தில் 2019இல் அடைந்த எதிர்பாராத எழுச்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மாறாக ஐந்து ஆண்டுகளில் அங்கு பாஜக  சந்தித்துள்ள தொடர் வீழ்ச்சி, அக்  கட்சியினரிடையே அவநம்பிக்கை யை விதைத்து கலக்கத்தை ஏற் படுத்தி உள்ளது.

பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில்  கடந்த ஐந்து ஆண்டுகளில் வீழ்ச்சி யின் கணக்குகள் மட்டுமே உள்ளன. 2019 மக்களவைத்தேர்தலில் 18  இடங்களில் வெற்றி பெற்றாலும்,  அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்  தல் மற்றும் இடைத்தேர்தல்களி லும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மற்றொரு வெற்றியைப் பெற முடியவில்லை. பாஜகவின் வளர்ச்சி என்பதே இம்மாநிலத்தில் சுருங்கி விட்டது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரப்படி, பாஜக 118  சட்டமன்றத் தொகுதிகளில் பெரும் பான்மையைப் பெற்றது. 40.7 சத விகித வாக்குகள் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாக 2021 சட்ட மன்றத் தேர்தலில் மாநில அதி காரத்தைக் கைப்பற்றுவோம் என்று  தம்பட்டம் அடித்தது. ஆனால் நேர்  மாறாக பலத்த அடியை சந்தித்தது  பாஜக. நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பல நாட்கள் பிரச்சாரம் செய்த போதிலும் 77 இடங்களே கிடைத்தன. வாக்கு சதவிகிதம் 37.97 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பெரும் பின்னடைவு. 2023 உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் தோல்வி.

அசன்சோல் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஒன்  றிய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் கட்சிக்கு மாறினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யையும் ராஜிநாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலிலும் தோல்வி அடைந்தது பாஜக. அதன்படி மக்களவை உறுப்பி னர்களின் எண்ணிக்கை பதினே ழாக குறைந்தது. 2021க்குப் பிறகு,  ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜக விடம் இருந்த இரண்டு இடங்கள் உட்பட ஏழு இடங்களிலும் அக்கட்சி  தோல்வியடைந்தது. நான்கு இடங்களில் டெபாசிட் பணம் காணாமல் போனது. மூன்றாவது இடத்தில் இருந்த இடதுசாரி முன்னணி, இரண்டாவது இடத் தைப் பிடித்தது. இதனிடையே 8 பாஜக எம்எல்ஏக்கள் திரிணாமுல் கட்சிக்குத் தாவியுள்ளனர்.

2019ஆம் ஆண்டு பாஜகவின் எதிர்பாராத வெற்றியைத் தொட ர்ந்து, சுவேந்து அதிகாரி உள்ளிட்ட  முக்கிய திரிணாமுல் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். கட்சி  தாவி வந்தவர்களுக்கு கொடுக்கப்  பட்ட அதிக முக்கியத்துவம், பாஜக வின் பாரம்பரியத்தில் வந்தவர்  களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி யது. முன்னாள் மாநில தலை வர்கள் திலீப் கோஷ், ததாகதா ராய், ராகுல் சின்ஹா உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற னர்.

;